சென்னை: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் 1.70 லட்சம் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
UGC NET, CSIR-UGC NET போன்ற தேசிய தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான யுஜிசி நெட் தேர்வு அறிவிக்கப்பட்டது. ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டதை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த முழுமையாக கணினி வழியில் மட்டுமே நடைபெற்றது. தற்போது இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த தேர்வு எழுத மொத்தம் 11 லட்சத்து 21 ஆயிரத்து 225 பேர் தேர்விற்கு பதிவு செய்த நிலையில், 6 லட்சத்து 84 ஆயிரத்து 224 பட்டதாரிகள் மட்டுமே தேர்வை எழுதினார்.
இந்த நிலையில், இன்று . யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமாக 1 லட்சத்து 70 ஆயிரத்து 734 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதன்படி, பிஎச்டி படிக்க தகுதியுடையவர்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 70 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில் 53 ஆயிரத்து 694 பேரும்,
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்பிற்கு (JRF-Junior Research Fellowship) 4 ஆயிரத்து 970 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை பட்டதாரிகள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 எனும் உதவிமைய எண் அல்லது ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். மேலும், கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in எனும் வலைத்தளத்திலும் தெரிந்துகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.