டெல்லி: கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப அவர்களிடமே கொடுக்க வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும், யுஜிசி (பல்கலைக்கழக மானியக்குழு) உத்தரவிட்டு உள்ளது.
பள்ளியில் இறுதியாண்டு முடித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணாக்கர்கள், விரும்பி பாடம் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டால்,முதலில் ஏதாவது ஒரு கல்லூரியில் சேருவதும், பின்னர் தான் விரும்பிய பாடம் கிடைத்ததும், ஏற்கனவே சேர்ந்த கல்லூரியில் இருந்து விலகிவிடுவதும் வழக்கமாக உள்ளது. ஆனால், அவ்வாறு விலகும் மாணாக்கர்களிடம் வசூலிக்கப்படும் கல்வி கட்டணங்களை, எந்தவொரு கல்லூரியும் முழுமையாக திருப்பி கொடுப்பது கிடையாது.
ஆனால், யுஜிசி விதிகளின்படி, கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும். இந்த நிலையில், மா ணவர்களின் முழு கல்விக் கட்டணத்தையும் திருப்பித் தர கல்லூரிகளுக்கு பல்கலை. மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.