சென்னை: தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான எம்.பி.பிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்குவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு இன்றுமுதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கலந்தாயவு குறித்து அமைச்சர் அறிவித்துள்ளார்.
நடப்பாண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு சர்ச்சைகளைத் தொடர்ந்து, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில், MBBS மற்றும் BDS படிப்புகளில் சேர இன்று காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 8ஆம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆகஸ்ட் 21-ம் தேதி மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தமிழ்நாட்டில் தொடங்கும் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அதனை சார்ந்த அரசு பள்ளி, மருத்துவ கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று காலை 10 மணியுடன் ww.tnmedicalselction.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . ஆகஸ்ட் 8 மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். மத்திய அரசு நாடு முழுவதும் இந்த முதற்கட்ட கலந்தாய்வை ஆகஸ்ட் 14ம் தேதி முதல் நடத்துகிறது.
ஆனால் தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தொடங்க தொடங்க உள்ளது. மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தரவரிசை பட்டியல் 19-ம் தேதி வெளியாகும். 7.5% இடஒதுக்கீடு, சிறப்பு பிரிவினர் விண்ணப்பங்களை 28ம் தேதி நேரில் நடைபெறும் எனவும் இதர பிரிவுகளுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கும என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 85% இடங்களுக்கான கலந்தாய்வு ஆக.21இல் தொடங்கும். 7.5% இடஒதுக்கீடு, சிறப்பு பிரிவினருக்கு ஆக.22, 23இல் நடைபெறும்
மாநில அரசின், மருத்துவ கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக, 15 சதவீதம் இடங்களில், மாணவர் சேர்க்கைக்கான, அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு அறிவிப்பு ஏற்கனவே வெளியிட்டிருந்தார்கள்.
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு மொத்தம் 9,050 இடங்கள் உள்ளன. 21 தனியார் கல்லூரிகளில் 3,400 மருத்துவ இடங்கள் உள்ளன. 2,200 பல் மருத்துவ இடங்கள் உள்ளன, இதில் 200 அரசு இடங்கள் உள்ளது.
ஆன்லைனில் நடைபெறக்கூடிய கலந்தாய்வுக்கான முதல் சுற்றில் ஆகஸ்ட் 14 முதல் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.
ஆகஸ்ட் 16 முதல் 20ம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதற்கு பிறகாக 20,22தேதிகளில் சிறப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும்.
ஆகஸ்ட் 23ம் தேதி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் குறித்தான அறிவிப்பு வெளியாகும்.
ஆகஸ்ட் 24 முதல் 29ம் தேதிவரை மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என தெரிவித்துள்ளார்.