புதிய சரித்திரம் : உடுப்பி கிருஷ்ண மடத்தில் இஃப்தார் விருந்து

டுப்பி

முதல் முறையாக உடுப்பி கிருஷ்ணா மடத்தில் முஸ்லிம்களுக்காக இஃப்தார் விருந்து கோயிலின் அன்னதான மண்டபத்தில் நடந்தது/

இஸ்லாமியர்களின் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இஃப்தார் என்பது தெரிந்ததே.  அந்த இஃப்தார் விருந்தை புகழ்பெற்ற உடுப்பி கிருஷ்ணா மடத்தில் கோயிலில் உள்ள அன்னபிரம்மா மண்டபத்தில் பெஜாவர் மடத்தலைவர் (ஜீயர்) விஸ்வேஷ தீர்த்த சாமி நடத்தினார்.

மாலை 6.59 உடன் விரதத்தை முடித்துக் கொண்ட இஸ்லாமியர்களுக்கு வாழை, தர்பூசணீ, ஆப்பிள், பேரீச்சை போன்ற பழ வகைகளுடன் முந்திரிப்பருப்பும் மிளகு கஷாயமும் வழங்கப்பட்டது.   விருந்துக்கு வந்த இஸ்லாமியர்களுக்கு ஜீயர் தானே பேரீச்சம் பழத்தைப் பரிமாறினார்.

பிறகு அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.

தம் உறையில் “கர்நாடகா வில் அமைதி நிலவ வேண்டும்,  நாம் அனைவரும் ஒரு தாயின் பில்ளைகள்.  மங்களூர், காசரகோடு, பத்கால் ஆகிய இடங்களுக்கு நான் சென்ற போது அங்குள்ள இஸ்லாமியர்களும் எனக்கு நிறைய உதவினார்கள்.   அனைவருக்கு ஈத் வாழ்த்துக்கள் எனக் கூறினார்,

அதன் பிறகு  அன்னபிரம்மா மண்டபத்தின் இரண்டாம் மாடியில் அனைத்து இஸ்லாமியர்களும், அஞ்சுமான் மசூதியின் தலைவரான மவுலானா இனயத்துல்லாவின் தலைமையில் தொழுகை நடத்தினர்.

கர்நாடகாவின் பல மதத் தலைவர்களும்,  அரசியல் பிரமுகர்களும் இந்நிகழ்வை வாழ்த்தி வரவேற்றுள்ளனர்

 


English Summary
Udupi kkrishna mutt arranged an ifthar, first time in Histor