வழக்கமாக ஒரு நடிகரின் திரைப்படம் ரிலீசாகும் அன்று நடிகரின் ரசிகர்கள் பால் அபிஷேகம், கட் அவுட்டுக்கு மாலை, பட்டாசு என்று பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு கொண்டாடுவர் .

ஒரு சில நடிகர்கள் இதை எல்லாம் வேண்டாம் என்று மறுப்பது போல் மறுப்பு தெரிவிப்பார் இருப்பினும் இக்கொண்டாட்டம் களை கட்டும்.

ஆனால் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான சைக்கோ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வந்தது . அதன் கொண்டாட்டம் சற்று வித்தியாசமாகவே இருந்தது . இன்னும் சொல்ல போனால் பொதுமக்களை ஆச்சர்ய படுத்தியது .

 

விழிப்புணர்வை மையப்படுத்தி சற்று வித்தியாசமாக பொதுமக்களுக்கு பயனுள்ள காரியத்தை செய்ய வேண்டும் என எண்ணிய உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகிகள் இலவச ஹெல்மெட் விநியோகம் செய்யலாம் என முடிவெடுத்தனர்.

அதன்படி சென்னை சத்யம் திரையரங்கம் முன்பாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பாபு , அமைந்தகரை குட்டி மற்றும் வினோத்  உள்ளிட்டோர் இலவச ஹெல்மெட் விநியோகத்தை துவக்கி வைத்தனர்.

அதே போல் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பாக சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம் என பல பகுதிகளில் இலவச ஹெல்மெட் விநியோகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து உதயநிதியின் விசுவாசி மற்றும் தீவிர ரசிகரான அமைந்தகரை குட்டி , வினோத் தலைவனுக்கு என்ன பிடிக்குமோ அதை தான் செய்தோம் . உதயநிதி திரைப்படம் திரைக்கு வரும் ஒவ்வொரு முறையும் மக்களுக்கு பயனுள்ள காரியத்தை மட்டுமே ஆற்றிவருகிறோம்
அவர் நடிகர் மட்டுமில்லை சிறந்த தலைவரும் கூட என்று கூறினார் .

வெள்ளிக்கிழமை வெளியான சைக்கோ படம் வெளியிடப்பட்ட அணைத்து திரையரங்குகளை பார்வையிட்டு வந்தார் உதயநிதி . ரசிகர்களின் பாதுகாப்பு அவருக்கு மிக முக்கியம் என்பதை இவ்வழியில் காட்டினார்