சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரூ போட்டு பாஜகவை அலற விட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி புகழ்ந்துள்ளார்.

இன்று சட்டசபையில் துணை முதல்வர்ர் உதயநிதி ஸ்டாலின்,-

”நான் பதிலுரை வழங்கும்போதெல்லாம் அதிமுகவினர் அவையில் இருக்க மறுக்கிறார்கள். எதிர்கட்சித் தலைவர் ஒருவாட்டிக்கூட நான் பதில் சொல்லும்போது இருக்கமாட்றாங்க. கடந்த முறை எனது காரில் தவறாக ஏற நினைத்தவர்களை பாதை மாறி செல்லாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்தேன். எங்க காரு தப்பா போகாதுன்னு சொன்னாங்க… ஆனால் இன்று டெல்லி சென்று பல கார்களில் ஏறி, பாதை மாறி சென்றிருக்கிறார்கள்.

பொதுவாக சிலர் ஒரு பேப்பரில் எழுத தொடங்கும்போது ‘உ’ போட்டு எழுதுவர். ஆனால் நம்முடைய முதல்-அமைச்சர் ‘ரூ’ போட்டு இந்த பட்ஜெட்டை தொடங்கி வைத்துள்ளார். பாசிஸ்டுகள் எத்தனை ரூல்ஸ் போட்டு தமிழ்நாட்டை அடக்க நினைத்தாலும் பட்ஜெட்டில் ஒரே ஒரு ‘ரூ’வை போட்டு அலற வைத்துள்ளார். இந்தி திணிப்பு மட்டுமல்ல, எந்த திணிப்பையும் தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார். எந்த திணிப்பும் யாராலும் கொண்டுவர முடியாது.

சென்னை பார்முலா 4 கார் பந்தயத்திற்கு எத்தனையோ எதிர்ப்புகள் வந்தன.. ஆனால், எதிர்த்தவர்களே பாராட்டும் அளவுக்கு சிறப்பாக நடத்தப்பட்டது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும். கடந்த 3 ஆண்டுகள் மட்டும் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் 2.65 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. 6,812 அறிவிப்புகளில், 96 சதவீத அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3,803 பணிகள் முடிந்துள்ளன; எஞ்சிய பணிகளை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.”

எனக் கூறியுள்ளார்.