சென்னை

மிழக சட்டசபையில் கே என் நேருவை பின் தள்ளி உதயநிதிக்கு  இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 20 முதல் 29 ஆம் தேதி வரை 10 நாட்கள் தமிழக சட்டசபையில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டது. சட்டசபை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்தால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்த வேண்டும். என்பதால் சட்டப்பேரவை கூட்டம் நேற்று (டிச.9) காலை கூடியது.

கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்றார். மேலும் 4 அமைச்சர்கள் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில் சட்டசபையில் அமைச்சர்கள் வரிசை மாற்றியமைக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டசபையில் முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது

ஏற்காவே அமைச்சராக இருந்தபோது 10-வது இடத்தில் இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 3-வது இடத்துக்கு முன்னேறி முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்துள்ளார். ஏற்கனவே 3-வது இடத்தில் இருந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

TN Assembly, Udhayanithi Stalin, 3 rd place,