சென்னை
துணை முதல்வர் உதயநிதி பெசண்ட் நகர் கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை திறந்து வைத்துள்ளார்/

சென்னை மாநக்ராட்சி சென்னை நகரில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையிலாக மாற்றும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதையை அமைத்துள்ளது.
சென்னை மாநகராட்சி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதை அமைத்துள்ளதற்கு மாற்றுத்திறனாளிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
நேற்று, பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் 190 மீட்டர் நீளத்தில் 2.80 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள மரப்பாலத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து மாற்றுத்திறனாளிகளுடன் பயணித்து மரப்பாலத்தை கடந்து அவர்கள் கடற்கரை நீரில் கால் வைத்து மகிழ்வதையும் கண்டு ரசித்தார்.