கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பெங்களூருக்கு சென்று புனீத் ராஜ்குமாரின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் அமைச்சர் அன்பில் மகேஷும் அஞ்சலி செலுத்தினார்.