சென்னை: நாளை அமைச்சராக பதவி ஏற்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழகஅரசும், முதல்வரின் குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கட்சி மாச்சரியமின்றி முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதுடன், குடும்ப நண்பர்கள் என பலருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை, முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி தலைவராக இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு (2021) நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். இதையடுத்து, அவரக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, உதயநிதியின் நண்பரான அமைச்சர் அன்பில் மகேஷ் உள்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். இதுதவிர பல மாவட்டங்களில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதற்கேற்றால்போல சில அரசு நிகழ்வுகள் அவரை வைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதனை கவர்னர் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, நாளை காலை முபகூர்த்த நேரமாக காலை 9.15-10.15க்குள் அவர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான பணிகள் கவர்னர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பதவி ஏற்பு விழாவை சிறப்பாக கொண்டாட முதலமைச்சர் குடும்பத்தினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு திமுக பதவி ஏற்பு விழா காலக்கட்டத்தில் கொரோனா நெறிமுறைகள் இருந்தால், குறைந்த அளவிலான நபர்களே கலந்துகொண்ட நிலையில், நாளை நடைபெற உள்ள உதயநிதியின் பதவி ஏற்பு விழாவில் முக்கியஸ்தர்கள், அரசியல் கட்சியினர், திரையுலகினர், குடும்ப உறவுகள் என பலதரப்பினர் கலந்துகொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளும் வகையில் சுமார் 400 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.