சென்னை:
உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உதயநிதிக்கு எந்த பதவி கொடுத்தாலும் அவரது தாத்தா, அப்பாவை போல் சிறப்பாக செயல்படுவார் என்றும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
உதயநிதி பிறந்த தின விழாவின் போது இதே கோரிக்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.