கத்தார்: அரபு உலகத்தின் முதல் அணு உலை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பரக்காவில் திறக்கப்பட்டுள்ளது.

கத்தாருக்குக் கிழக்கே பரக்காவில், வளைகுடா கடற்பகுதியில் இந்த அணு உலை அமைந்துள்ளது. 4  உலைகளை கொண்ட இந்த பரக்கா அணு வளாகத்தில், முதல் அணு உலை மட்டும் செயல்பாட்டுக்கு வந்துள்து.

தென் கொரிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அணு உலை அமைக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டே இந்த அணு உலை செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பு பிரச்னைகள் காரணமாக அணு உலை இயக்கம் தாமதமானது.

எண்ணெய் வளம் மிக்க ஐக்கிய அரபு அமீரகம், தங்களது மின்சார தேவையில் 25 சதவீதத்தை இந்த அணு உலையை சார்ந்து இருக்கத் திட்டமிடுகிறது. 2 வாரங்களுக்கு முன்புதான் ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.