Kuwait-தமிழ் பசங்க முகநூல் பக்கத்தில் இருந்து..
ங்கள் நிறுவனத்தில் பணிபுரிவோர், பணியிலிருந்து சுயமாக விடுவித்து கொள்ள விரும்பினால் ராஜினாமா கடிதத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும் பட்சத்தில்  அதை ஏற்றே ஆக வேண்டும் என்று   அமீரக மனிதவள அமைச்சகம்  தன்நாட்டு நிறுவனஙகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
a
அதேவேளை ஒருவர் தன்னுடைய நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பு காலத்தை (Notice Period) பரஸ்பரம் நீட்டித்துக் கொள்ள சம்மதித்தால் அதை அதிகாரபூர்வமாக நிறுவனத்திடமிருந்து ஊழியர்கள் எழுதி வாங்கி வைத்துக் கொள்ளலாம். அதே நேரம், ராஜினாமா செய்த பின்பும் தொடர்ந்து 6 மாதங்கள் பணியாற்றினால் ஊழியர்கள் விண்ணப்பித்த ராஜினாமா கடிதம் தானாகவே காலாவதி ஆகிவிடும் என்று அமீரக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஊழியர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை தொலைநகல் (Fax) வழியாகவோ, அஞ்சல் (Mail) வழியாகவோ, மின்னஞ்சல் (e-mail) வழியாகவோ அனுப்பிய விபரங்களை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.