19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி-20 உலகக்கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இதில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்த நியூஸிலாந்து அணி இந்திய அணிக்கு 108 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இந்திய U19 மகளிர் அணி 14.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.

29 ம் தேதி (ஞாயிறன்று) நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.