மியாமி:
அடுத்த ஆண்டுக்கான பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் நடைபெற்ற ஆலோசனையை தொடர்ந்து, 2020ம் ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமை இந்தியாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
17 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தால் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு போட்டி பிரான்சில் நடைபெறு கிறது.
அடுத்த ஆண்டுக்கான போட்டி நடைபெறுவது தொடர்பாக, பல நாடுகள் தங்கள் நாடுகளில் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்தன. இது தொடர்பாக மியாமியில் நடந்த பிபா கவுன்சில் கூட்டத்தில், 2020ம் ஆண்டைய 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமை இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதை இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரபுல் படேலும் உறுதி செய்துள்ளார்.
சிய சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி வருகிறது. அங்கு புதன்கிழமை நடந்த போட்டியில் மாலத்தீவு அணியை 6-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. தெற்காசிய போட்டிகளில் இந்திய அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.