அரிசோனா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி அமெரிக்க செனட் சபையில் கோரிக்கை வைத்த டிரம்புக்கு எதிராக 303 பேர் வாக்களித்தனர் ஆதரவாக 121 மட்டுமே வாக்களித்தனர்.

இதில், டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த 90 பேர் (40 சதவீதம்) அவருக்கு எதிராக வாக்களித்தனர்.

முன்னாதாக இந்த வாக்கெடுப்பை நடத்த விடாமல் செய்ய டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர் இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

உலகின் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் மாறி மாறி வெற்றி பெற்று இரு கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்யும் முறை நிகழ்ந்து வருகிறது.

இரு கட்சிகளுக்கும் சம அளவு ஆதரவாளர்கள் இருந்த போதும், நடுநிலையாளர்களின் சொற்ப சதவீத வாக்குகளே அங்கு தேர்தல் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.

இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அதிபர் டிரம்ப் தன் தோல்வியை ஏற்க மறுத்து நீதிமன்றங்களை நாடினார், அங்கு அவருக்கு எதிராக தீர்ப்பு கிடைத்ததை அடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் இன்று அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக அவையில் பேசிய உறுப்பினர்கள், இரு கட்சிகளும் சம ஆதரவு பலத்துடன் இருக்கும் நிலையில், டிரம்ப் தனது ஆதரவாளர்களை போராட்டத்தில் இறக்கிவிட்டு நாட்டையே சுடுகாடாக்க நினைக்கிறார் என்றும் உறுப்பினர்களை பிணை கைதிகளாக பிடித்துவைத்து தனக்கு சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கும் முயற்சி என்றும் குற்றம் சாட்டினர்.