இங்கிலாந்து:
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர், எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் லண்டனில் இருக்கும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அவசர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து பிரதமர் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், பிரதமர் நல்ல நிலையில் குணமாகி வருகிறார், அவர் ஓய்வு நேரங்களுக்கிடையில் குறுகிய நடைப்பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகிறார் அவர் தனது மருத்துவர்களிடம் பேசியதோடு மட்டுமின்றி, தனக்குக் கிடைத்த நம்பமுடியாத கவனிப்புக்காக முழு மருத்துவக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
இந்நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 563 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பலி எண்ணிக்கை 2,352 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.