சென்னை: பிரிட்டனில் இருந்து  இந்திய வந்துள்ள 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில்,  தற்போது, உ.பி. மாநிலம் வந்துள்ள தம்பதியின் 2வது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது.

புதியவகையிலான உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் இருந்து பரவி வருகிறது.  இதையடுத்து, இங்கிலாந்தில்  கடந்த  நவம்பர்  மாதம் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய அனைவருக்கும் கொரோனா  சோதனை நடத்தப்பட்டது. சுமார்  33,000 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில்,  114 பேருக்கு கொரோனா உறுதியானது.  அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களின் ரத்த மாதிரி, உருமாறிய கொரோனா சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில்  6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

இந்த நிலையில், இங்கிலாந்திலிருந்து தனது பெற்றோருடன் மீரட்டுக்கு திரும்பிய இரண்டு வயதுக் குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள மீரட் நகர சுகாதாரத்துறை அதிகாரிகள், அந்த குழந்தையின் பெற்றோர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களது 2வது குழந்தையும் பாதிப்புக்குள்ளாது.  அந்த குழந்தையின் ரத்தம் சோதிக்கப்பட்டதில், உருமாறிய கொரோனா தொற்று பரவியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து,  அந்த பிஞ்சுக் குழந்தை மீரட்டில் உள்ள சுபார்த்தி மருத்துவக் கல்லூரியில் தனது பெற்றோர்களுடன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா சோதனை முறைகளை மேம்படுத்தவும், புதிய வைரஸ் மாறுபாட்டின் பரவலைக் கண்டறியவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் மீண்டும் தயார் நிலையில் இருக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்

=