சென்னை: பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இரண்டுமுறை பதக்கம் வென்ற சேலம் வீரர் மாரியப்ன் தங்கவேலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு வேலைக்கான ஆணையை இன்று வழங்கினார்.
2017ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவரும், 2021ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்கிலும் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்று சாதனை படைத்த தமிழக வீரர் சேலம் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழகஅரசு சார்பில் அரசு பணி வழங்கப்பட்டு உள்ளது.
அவரது வெற்றிக்கு மகுடம் சூட்டும் வகையில், குரூப் 1 பிரிவில் அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். அதன்படி, தங்கவேலு மாரியப்பனுக்கு தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அரசு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு மாரியப்பன் தங்கவேல் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இரண்டு பாராஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் பதக்கம் வென்றார். 2016ஆம் ஆண்டு தங்கப்பதக்கம் வென்றார். தற்போது நடந்து முடிந்த டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பனுக்கு இந்திய அரசு, கடநத் 2017ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினை வழங்கியது குறிப்பிடத்தக்கது.