எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் ஆனால் பக்கத்து ஊர் மற்றும் கிராமங்களிலிருந்து வண்டிகட்டிகொண்டு வந்து நாள் கணக்கில் காத்திருந்து படங்கள் பார்த்த காலம் உண்டு. இன்று கைப்பேசியில் சூப்பர் ஸ்டார் படம் முதல் எல்லா மொழிப் படங்களும் ஒடிடி தளங்கள் முல்ல்ம் அடங்கிவிட்டன. அதுவும் தியேட்டரில் ரிலீஸ் ஆன பிறகே ஒடிடியில் ரிலீஸ் என்ற நிலையும் மாறி இன்றைக்கு நேரடியாக ஒடிடியில் படங் கள் வெளியாகின்றன.
வெங்கட் பிரபு தயாரித்த ஆர்.கே நகர் தொடங்கி ஒரு சில படங்கள் ஒடிடியில் ஏற்கனவே ரிலீஸ் ஆகியிருந்தாலும் ஜோதிகா வின் ’பொன்மகள் வந்தாள்’ படம்தான் ஒடிடி ரிலீஸில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து கீர்த்தி நடிக்கும் ‘பெண்குயின்’ ஒடிடியில் ரிலீஸ் ஆகிறது. இன்னும் சில படங்களுக்கு பேச்சு வார்த்தை நடந்துக்கொண்டிக்ருகிறது.


கொரோனா ஊரடங்கால் கடந்த 70 நட்களாக தியேட்டர்கள் மூடிகிடக்கின்றன. அதை திறக்கும்போது அந்த தியேட்டர்கள் என்ன கதியில் இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை. சென்னையில் ஏற்கனவே சில தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன. சாந்தி தியேட்டர் வளாகம் வர்த்தக மால் ஆகிவிட்டது. சாந்தி தியேட்டர் காணாமல் போய்விட்டது. இந்நிலையில் மேலும் 2 தியேட்டர்கள் மூடும் நிலையில் உள்ளதாக தயாரிப்பளர் கஸாலி என்பவர் கூறி உள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது.’ஏ.வி.எம். ராஜேஸ்வரி மற்றும் மஹாராணி ஆகிய திரையரங்கங்கள் நிரந்தரமாக மூடப் படப் போவதாகத் தகவல் வந்திருக்கின்றன.
வருடாந்திர வரவு செலவுக் கணக்கில் ஏற்படும் நஷ்டம் மிகப் பெரிய காரணம் என அறிகிறேன். மகாராணி தியேட்டர் உரிமையாளருக்கு வயதாகி விட்டது, கடந்த வருட கணக்குப் படி அவருடைய நஷ்டம் சுமார் 45 லட்சம். நஷ்டத்தின் விளைவாக தியேட்டரை நிரந்தரமாக மூடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்’ என தெரிவித்திருக்கிறார்.