சூடான்; சூடான் நாட்டில் இருந்து எத்தியோப்பியா சென்ற எத்தியோப்பியன் விமானம், 37,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தை இயக்கிய 2 விமானிகளும் குறட்டை விட்டு தூங்கிவிட்டனர். விமானம் இறங்கும் இடம் வந்தபோது, விமானம் எழுப்பிய அலாரம் காரணமாக, விமானிகள் எழுந்ததால்,  அதிர்ஷ்டவசமாகபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

சூடான் நாட்டின்  கார்ட்டூமில் விமான நிலையத்தில் இருந்து எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு எத்தியோப்பியா நாட்டைச் சோர்நத் போயிங் 737-800 ET-343 என்ற எத்தியோப்பி யன் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த  விமானம் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானிகள்  இருவரும் விமானத்தை தன்னியக்க பைலட்டில் வைத்துவிட்டு, தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால், விமானம் தன்னியக்கப்படி நேராக பறந்துகொண்டிருந்தது. அதாவது, விமானம் தன்னியக்க பைலட்டில் இருந்தது மற்றும் ஃப்ளைட் மேனேஜ்மென்ட் கம்ப்யூட்டர் (எஃப்எம்சி) அமைத்த பாதையின்படி தொடர்ந்து விமானம் சென்று கொண்டிருந்ததாகவும் தரையிறங்கும் இடம் அருகே வரும்போது, அலாரம் அடித்து, விமானங்களை எழுப்பும் வகையிலும் செட் செய்யப்ப்டடிருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், விமானம் தலையிறங்க வேண்டிய இடம் அருகே வந்தபோது, விமான நிலைய கண்ட்ரோல் ரோம் அதிகாரிகள், விமானிகளுடன் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால், எந்தவொரு பதிலும் வராததால், பரபரப்பு ஏற்பட்டது.  விமானிகள் தூங்கியதால், விமானம் நியமிக்கப்பட்ட ஓடுபாதையில் தரையிறங்கவில்லை என்பதையும், விமானிகளுக்கு செய்யப்பட்ட அழைப்பு களுக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை என்பதையும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த பரபரப்பான சூழலில் அந்த விமானமானது, தன்னியக்க பைலட்டிலிருந்து (autopilot) துண்டிக்கப்பட்ட பிறகு வெய்லர் சத்தமாக ஒலித்ததும் விமானிகள் எழுந்ததக கூறப்படுகிறது. விமானம் தரையிறங்க சுமார் 25 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், இரு விமானிகளும் துரிதமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமானிகளின் பாதுகாப்பற்ற தன்மையால், பெரும் விபத்து ஏற்பட இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக தப்பியது. இதுகுறித்த அந்நாட்டு விமானத்துறை விசாரணை நடத்தி வருகிறது