டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நேபாள் நாட்டைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தினேஷ் சுப்பா மற்றும் ஷியாம் சுப்பா ஆகிய அந்த இரண்டு நேபாளிகள் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழந்தைதாகக் கூறியுள்ளனர்.
ஏஜென்ட் மூலம் போலி பாஸ்போர்ட் பெற்று கம்போடியா செல்ல முயன்ற அவர்களுக்கு தபஸ்ஸும் அல்வி என்ற பெண் ஏஜென்ட் உதவியதாகத் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கிய மோசடி கும்பலை தேடி வரும் போலீசார் இவர்கள் வேறு ஏதும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.