டெல்லி:

டெல்லி நிஜாமுதீன் தர்காவை சேர்ந்த ஆசிப் நிஜாமினி மற்றும் தலைமை இமாம் நஜீம் நிஜாமினி ஆகியோர் பாகிஸ்தான் லாகூரில் உள்ள தாத்தா தர்பார் புனித ஸ்தலத்தக்கு சென்றனர். அங்கிருந்து கராச்சிக்கு விமானத்தில் செல்ல இருவரும் திட்டமிட்டினர்.

லாகூர் விமானநிலையத்தில் ஆசிப் கராச்சி மட்டும் கராச்சிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். நஜீமை லாகூரில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விட்டனர். பயண ஆவணங்கள் சரிவர பூர்த்தி செய்யவில்லை என்று காரணம் கூறப்பட்டது.

அவர் லாகூர் விமான நிலையத்தில் இருந்து எங்கு சென்றார் என்பது தெரியாமல் இருந்தது. கராச்சிக்கு சென்ற ஆசிப்பையும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. இதனால் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் பீதியடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் மத்திய அரசு மூலம் பாகிஸ்தான் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பாகிஸ்தான் அதிகாரிகளின் தீவிர நடவடிக்கையால் இருவரும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வரும் 20ம் தேதி இந்தியா திரும்புவார்கள் என்று தகவல்வெளியாகியுள்ளது.