மராத்வாடா: மகாராஷ்டிராவில் 2 மாவட்டங்களில் உள்ள 2000க்கும் மேற்பட்ட பறவைகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பர்பானி மற்றும் லோகாண்டி சாவர்கான் கிராமத்திலிருந்து, பாதிக்கப்பட்ட பறவைகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டது என்று சேலு நகர வட்டாட்சியர் குப்தா தெரிவித்துள்ளார். அந்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், அங்குள்ள பறவைகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் முக்லிகர் தெரிவித்தார்.
முதற்கட்டமாக பறவைகளின் மாதிரிகளின் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அவைகள் அழிக்கப்பட்டன. லோகாண்டி சாவர்கான் கிராமத்தில் சுமார் 1,600 பறவைகள் அழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பறவைகளை அழிக்க இரண்டு தனிக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட பறவைகளை புதைக்க 2 மீட்டர் அளவில் குழிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. மும்பை, தானே, பர்பானி, லாதூர், பீட் மற்றும் தபோலி ஆகிய மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.