பஞ்ச்குலா:

லாத்கார குற்றச்சாட்டு காரணமாக சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் குர்மித்ராம் ரஹீம் மீது மேலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகிறது.

அவரது தேரா சச்சா ஆசிரமத்தில் அவரது ஆசைக்கு இணங்க மறுத்த  இளம்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டபோது சிலர் மரணத்தை தழுவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பத்திரிகை யாளர் ஒருவரும் கொலை செய்யப்பட்டது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்திரபதி உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இன்று  பலாத்கார சாமியார் ராம் ரஹீமிடம் விசாரணை நடத்துகிறது.

அரியானா மாநிலத்தில் சிர்சா நகரில் தேரா சச்சா சவுதா என்ற பெயரில் ஆசிரமம் நிறுவி, ஆன்மிகத்தை போதிப்பதாக கூறி இளம்பெண்களை சூறையாடி வந்த, அந்த ஆசிரமத்தின் தலைவர்  ராம் ரஹீம் மீது பலாத்கார குற்றச்சாட்டு கூறப்பட்டது.

கடந்த2002-ம், அவரது ஆசிரமத்தில் புதியதாக சேர்ந்த இளம்பெண் பக்தையை பலாத்காரம் செய்து வன்புணர்வு செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு, சாமியார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர்மீது மேலும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த 2002ம் ஆண்டு சிர்சாவை சேர்ந்த பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்திரபதி மற்றும் தேரா இயக்கத்தின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் ஆகியோர் பலாத்கார சாமியார் ராம் ரஹீமின் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டனர் என்ற வழக்கு தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை  சிபிஐ சிறப்பு நீதிபதி ஜெகதீப் சிங் விசாரிக்கிறார். இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.