இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த 2 அதிகாரிகள் திடீரென மாயமாகி உள்ளதாக கூறப்பபடுகிறது. இன்று காலையில் இருந்தே அவர்களை காணவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வேறு எந்தவித தகவலும் வெளியாகவில் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசா பிரிவில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் உளவு பார்த்த போது சிக்கினர். இதனையடுத்து அவர்கள் இருவரும் நாடு கடத்தப்பட்டனர்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய தூதரகத்தில் பணிபரியு்ம கவுரவ் அலுவாலியா என்ற பொறுப்பு அதிகாரியை ஐஎஸ்ஐ அமைப்பினர் பின் தொடர்ந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது 2 அதிகாரிகள் திடீர் மாயமாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.