பெல்ஜியம்:
2 நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மிருகக்காட்சிசாலை தெரிவிக்கையில், பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள 14 வயதான ஹிப்போஸ் இமானி மற்றும் 41 வயதான ஹெர்மியன் ஆகிய இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு நீர் யானைகளுக்கும், மூக்கு ஒழுகுவதைத் தவிர எந்த அறிகுறிகளும் இல்லை, ஆனால் முன்னெச்சரிக்கையாக இந்த ஜோடி தனிமைப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.