டெல்லி: எல்லைப்பகுதிகளில் மீண்டும் மீண்டும் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில், ராணுவ தளபதி முகுந்த் நரவானே இன்று திடீர் லடாக் எல்லைப்பகுதிக்கு பயணம் மேற்கொண் டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீர் மாநிலம் லடாக் லே எல்லைப்பகுதியில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தன. அதைத்தொடர்ந்து இரு நாடு களுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. அமைதி ஏற்படுத்த ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், சீனப்படைகள் அவ்வப்போது எல்லைப்பகுதியில் வாலாட்டி வருகின்றன.
அமைதிப் பேச்சுகளின் போது படைகளை முழுவதும் விலக்கிக் கொள்வதாக ஒப்புக் கொண்ட சீனா, தங்களது ராணுவ வீரர்களை விலக்கிக் கொள்ள மறுத்து வருகிறது.
இந்த நிலையில், கிழக்கு லடாக் எல்லையில்,சீனா ஆக்ரமித்திருந்த பிங்கர் 4 மலைத்தொடரின் சில பகுதிகளை இரவோடு இரவாக இந்தியப் படைகள் அதிரடியாக மீட்து. இதையடுத்து, மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சீனப் படையினர் முன்னேறி வருவதைத் தடுக்க பிங்கர் 2, பிங்கர் 3 மலைச் சிகரங்களில் இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், டெஸ்பாங் தவுலத் எனுமிடத்தில் சீனா அதிக அளவில் படைகளைக் குவித் திருப்பதால், பதற்றம் ஏற்பட்டள்ளது. இதை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும்,
கிழக்கு லடாக் முதல் அருணாசலப்பிரதேசம் வரை எந்த வித அத்துமீறல்களுக்கும் இடம் கொடுக்காத வகையில் இந்திய ராணுவம் தனது படைபலத்தை விரிவுபடுத்தியு உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் ராணுவத் தளபதி எம்.எம் நரவானே இன்று திடீரென லடாக் பயணம் மேற் கொண்டு உள்ளார். கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் ஆய்வு நடத்த நரவானே சென்றுள்ளதாகவும், 2நாட்கள் அவர் அங்கு தங்கியிருந்து ஆய்வு நடத்துவார் என்று கூறப்படுகிறது. இது பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.