வாஷிங்டன்:
அமெரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் உகான் மாவட்டத்தில் உருவான கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளுக்கு பரவியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை கடுமையாக தாக்கி வருகிறது. வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்ந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கையும் 141 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேரியோ டயஸ் பலார்ட், பென் மெக் ஆடம்ஸ் இருவரும் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.