மும்பை: சமூகவலைதளங்களின் முக்கிய அம்சங்களில் ஒன்றான டிவிட்டர் திடீரென நேற்று பல நாடுகளில் செயலிழந்தது. ஆனால், அதற்கான காரணம் குறித்து உடனடி விளக்கம் கிடைக்கவில்லை.

DownDetector வலைதளம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், இந்தியா, ஜப்பான், கனடா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்காவின் பல பகுதிகள் மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் செயலிழப்பு ஏற்பட்டதாம்.

அந்த குறிப்பிட்ட நேரத்தில் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் ஆகியவற்றில் டிவிட்டரைப் பயன்படுத்த முடியவில்லை என்ற பல இடங்களிலிருந்து வந்த தகவல்கள் தெரிவித்தன.

டிவிட்டரை அக்சஸ் செய்வதற்கு பலர் முயன்றபோது, “tweets aren’t loading right now. Please tap to retry” என்ற பதிலே கிடைத்ததாம். மேலும், புதிய டிவீட்டை ஒரு பதிவிட முயன்றபோதும் முடியவில்லையாம்.

இந்த 2019ம் ஆண்டில், டிவிட்டர் மட்டுமின்றி, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூகவலைதளங்களும் முடங்கிய நிகழ்வுகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.