தொழில்நுட்ப கோளாறில் சிக்கிய டுவிட்டர் சீரானது

சென்னை:

சமூகவலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் பேஸ்புக், வாட்ஸ் அப் போல் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானதாகும். சாதரண மக்கள் மட்டுமின்றி உலகம், தேசிய தலைவர்கள், நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் டுவிட்டர் கணக்கு வைத்துள்ளனர்.

இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டுவிட்டர் இன்று சிறிது நேரம் முடங்கியது. இதனால் அதை பயன்படுத்துவோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதையடுத்து டுவிட்டர் தொடர்ந்து இயங்கத் தொடங்கியது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: twitter resumes after technical fault cleared, தொழில்நுட்ப கோளாறில் சிக்கிய டுவிட்டர் சீரானது
-=-