டெல்லி: உத்தர பிரதேச மாநிலஅரசின் வழக்கு எதிரொலியாக டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய தலைவர் அமெரிக்காவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலரது டிவிட்டர் கணக்குகளை விதிகளை மீறியதாக முடக்கி வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ள டிவிட்டர் நிறுவனம் தற்போது திடீரென, தனது நிறுவனத்தின் இந்திய தலைவராக இருந்து வந்த மணீஷ் மகேஸ்வரி என்பதை அதிரடியாக அமெரிக்காவுக்கு பணி மாற்றம் செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்திய உள்ளது.

ஜூன் மாதத்தில், சமூக வலைத்தளங்களில் ஒரு வெறுப்பு வீடியோ வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்பாக மகேஸ்வரி மற்றும் சிலருக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இந்த நிலையில், அவரை டிவிட்டர் தலைமை நிறுவனம் அமெரிக்காவிற்கு இடமாற்றம் செய்துள்ளது.
“மணீஷ் மகேஸ்வரி அமெரிக்கா தலைமை அலுவலகத்தில் வருவாய், வியூகம் மற்றும் செயல்பாடுகள் பிரிவின் மூத்த இயக்குனராக இருந்து தனது புதிய பொறுப்பில், கவனம் செலுத்துவார்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மகேஸ்வரி “சான் பிரான்சிஸ்கோவில் மூத்த இயக்குநராக, வருவாய் வியூகம் மற்றும் செயல்பாடுகளில் புதிய சந்தை நுழைவை மையமாகக் கொண்ட ஒரு புதிய பாத்திரத்திற்கு நகர்கிறார்” என்று தெரிவித்துள்ளது.
டிவிட்டரில் சேருவதற்கு முன், மகேஷ்வரி நெட்வொர்க் 18 டிஜிட்டலின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். பிளிப்கார்ட் மற்றும் பி & ஜி உள்ளிட்ட அமைப்புகளுடன் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த பல மாதங்களாக டிவீட்ஸ் மற்றும் உயர்மட்ட பயனர்களின் கணக்குகள் மற்றும் இந்த ஆண்டு மே மாதத்தில் நடைமுறைக்கு வந்த ஐடி விதிகளுக்கு இணங்குவதில் தாமதம் காரணமாக பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. இந்த நிலையில்தான், ஜூன் மாதத்தில், சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வெறுப்பு குற்றத்தின் வீடியோ தொடர்பான விசாரணை தொடர்பாக மகேஸ்வரி மற்றும் சிலருக்கு எதிராக உ.பி. மாநில அரசு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.