Skip to content
  • Tue. Sep 8th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
உலகம்

வன்முறை தூண்டும் தகவல்கள்: டிரம்பின் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள்  முடக்கம்

Jan 7, 2021
வாஷிங்டன்: வன்முறையை தூண்டும் வகையிலான வீடியோக்களை தனது சமூக வலைதளங்களில் பரப்பியதால், அதை உடடினயாக நீக்கிய சமூக வலைதள  நிறுவனங்கள், அவரது கண்குகளை முடக்கி வைத்துள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியடைந்தாலும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.  மேலும், தேர்தல் தொடர்பாக அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில், ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களையும் வீடியோவையும் பதிந்து வருகிறார்.
இந்த நிலையில், அங்கு புதிய அதிபர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி தொடர்பாக, ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று ( வியாழக்கிழமை) நடைபெற்றது. இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்ட வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து, அவரது  ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர்  திடீரென நாடாளுமன்ற  கட்டிடத்திற்குள் நுழைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தினரை கலைக்க  தூப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒரு பெண் பலியானார்.
இந்த நிலையில், தவறான கருத்துக்களை பரப்பிய  டிரம்பின் தகவல்களை நீக்கி சமூக வலைதள நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தன. அதைத் தொடர்ந்து,  டிரம்பின்  டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிர்வாகம் 12 மணி நேரத்திற்கு முடக்கியுள்ளது .  இதே போன்று தொடர்ந்து தவறான தகவல்களை தனது ட்விட்டர் கணக்கில் டிரம்ப் பரப்பி வந்தால் அவரது கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும் என்றும் ட்விட்டர் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
அதுபோல டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கை அந்நிறுவனம் 24 மணி நேரம் முடக்கி வைப்பதாக அறிவித்து உள்ளது. மேலும் பேஸ்புக் நிறுவனமும் டிரம்பின் பக்கங்களை முடக்கி வைத்துள்ளது. அமெரிக்க அதிபருக்கு எதிராக சமூக வலைதள நிறுவனங்கள்  எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Post navigation

இதுதான் டிரம்ப் மரபு : அமெரிக்க ஊடகம் அதிரடி விமர்சனம்
வலது சாரிகளால் குழப்பம் அடைந்துள்ள அமெரிக்க ஜனநாயகம் : பிரியங்கா காந்தி

Related Post

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

உலகம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

எல் நினோ வலுப்பெறும்: உலகம் முழுவதும் கடும் வெயில், மழை, வெள்ளம் ஏற்படும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer