கமதாபாத்

கமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்த சர்ச்சைக்குரிய கார்ட்டுனால் குஜராத் பாஜக டிவிட்டர் பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு  நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில்  குற்றம்சாட்டப்பட்ட 38 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு ஆயுள்  தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை பாராட்டி, குஜராத்தின் பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வெளியிட்டிருந்தது.

இந்த கார்ட்டூன் நெட்டிசன்கள் இடையே கடும்  சர்ச்சையை ஏற்படுத்தியது.  பலரும் இந்த கார்ட்டூன் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இது மிகவும் சர்ச்சையை உண்டாக்கியது. டிவிட்டர் நிர்வாகத்திடம் இது குறித்து புகார் அளிக்கபட்டது.

எனவே குஜராத் பாஜக பிரிவு பதிவிட்ட கார்ட்டூன் படத்தை டிவிட்டர் நிர்வாகம் அதிரடியாக நீக்கியது.

குஜராத் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் யிக்னேஷ் டேவ் இது குறித்து ‘குண்டுவெடிப்பு தீர்ப்பு குறித்து, யாரோ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில்  குண்டுவெடிப்பு தொடர்பான டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டது’ எனக் கூறி உள்ளார்.