டில்லி,
இரட்டை இலையைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் 6 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செயயப்படும் என்று டில்லி மாநில காவல்துறை அறிவித்து உள்ளது.
ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. அதைத்தொடர்ந்து தேர்தல் கமிஷன் இரட்டை இலையை முடக்கியது. அதை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி, தேர்தல் கமிஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க கூறப்பட்ட புகார் காரணமாக தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஏப்ரல் 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவரது வாக்குமூலத்தை தொடர்ந்து அதே மாதம் 25 ஆம் தேதி டிடிவி தினகரனை டெல்லி காவல்துறை கைது செய்து திகார் சிறை யில் அடைத்தது.அவர் ஜூன் 1 ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்தார்.
தற்போது ஜாமினில் வெளிவந்துள்ள டிடிவி தினகரன் மீது இன்னும் 6 வாரத்திற்குள் விசாரணை முடித்த் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என டில்லி காவல்துறை தெரிவித்து உள்ளது.
இந்த வழக்கில் விசாரணையின் நிலை குறித்து டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முடக்கப்பட்டுள்ள இரட்டை இலையைப் பெற டிடிவி தினகரனுடன் இணைந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்க முயன்றதாக