டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் உச்சமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 62,258 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குணமடைவோர் விகிதத்தை விட இரு மடங்காக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,19,08,910 உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 291 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,61,240 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 30,386 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,95,023 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை 4,52,647 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாடு முழுவதும இதுவரை 5,81,09,773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய புதிய பாதிப்பு 62,258 ஆக உள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 30,386 மட்டுமே. இதை கணக்கிடும்போது, தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் மற்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.