சென்னை

வெக பொதுச்செயலாள்ர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தவெக தொண்டர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்(37) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மாணவி பலாத்கார சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அவ்வரிசையில் அண்ணா பல்லைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் எழுதி இருந்தார்.

விஜய் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அந்த கடிதத்தை நகல் எடுத்து தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனா். தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள், விஜய் எழுதிய கடிதத்தை வினியோகம் செய்து வருகின்றனா்.

சென்னை தியாகராய நகரில் தவெக தொண்டர்கள், பொதுமக்களுக்கு விஜய் எழுதிய கடித நகல்களை வினியோகம் செய்தபோது அனுமதியின்றி இதுபோல் செயல்பட்டதாக கூறி தவெகவினரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனா்.

அவர்களை காண தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்ற நிலையில். புஸ்ஸி ஆனந்தையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புஸ்ஸி ஆனந்த் கைதுக்கு தவெக தொண்டர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனா்.

காவ்லதுறையினாரால் கைது செய்யப்பட்ட த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.மேலும் அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக, அனுமதியின்றி பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கியதாக கைதான த.வெ.க. கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரும் விடுவிக்கப்பட்டனர்.