சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டை ஆக. 21 ஆம் தேதி நடத்த தீர்மானித்துள்ளதாக காவல் துறையினருக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுவார் என கூறப்பட்டுள்ளது.

மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு ஆகஸ்டு 25ந்தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 27ந்தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால், மாநாட்டை முன்கூட்டியே நடத்த காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதை ஏற்று ஆகஸ் 21ந்தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடத்த இருப்பதாக தவெக தரப்பில் காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை கலக்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய் தனது கட்சியை மேலும் மேலும் வலுப்படுத்தி வருகிறார். சமீபத்தில், உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுகப்படுத்திய நிலையில், தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளனர். ஏற்னவே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த ஆண்டு , விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற்ற நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டு, அதற்கான இடம், மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தியில் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான பூமி பூஜை நடத்தப்பட்டு பணிகளும் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், மாநாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. கே. அரவிந்த், ஆகஸ்டு 27- ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதால், காவல்துறையினர் பெருமளவில் அதற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதனால் மாநாட்டு தேதியை மாற்றும்படி அறிவுறுத்தியதுடன் வருகிற 18- ஆம் தேதி முதல் 22- ஆம் தேதி வரை ஒரு தேதியை கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆலோசனை நடத்திய விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள், , காவல் துறை கூறிய தேதிகளில் ஒன்றான ஆக. 21 ஆம் தேதியை தேர்வு செய்து மாநாடு நடந்த காவல் துறையினரிடம் தவெக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,, மதுரையில் நடைபெறவிருக்கும் த.வெ.க. மாநாட்டுக்கான புதிய தேதி குறித்த அறிவிப்பை விஜய் இன்று(ஆக. 5), அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.