ங்காரா

துருக்கி நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அதிரடியால் எம்பிக்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

துருக்கியின் பிரதான எதிர்க் கட்சியான இடதுசாரி அரசியல் கட்சியான தொழிலாளர் கட்சி குர்திஷ் மக்களின் உரிமைகளை வலுவாக ஆதரிக்கிறது. அ எர்டோகன் தலைமையிலான துருக்கியின் ஆளும் கட்சியாக நீதி மற்றும் வளர்ச்சி கட்சி உள்ளது.  தொழிலாளர் கட்சியை சேர்ந்த 48 வயதான அதாலே, துருக்கி அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆயினும் சிறையில் இருக்கும்போதே கடந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு அவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது சிறைவாசம் ஒரு “மோசமான அநீதி” என்று தொழிலாளர் கட்சி அவரை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுத்தது.கடந்த ஜனவரி மாதம், அதாலேயின் பதவியை நாடாளுமன்றம் பறித்தது கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

துருக்கி நாடாளுமன்றம் பொதுவாக அக்டோபர் 1-ம் தேதி வரை கோடை விடுமுறையில் இருக்கும்.என்றாலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தலின் பேரில் கூடிய அவரச அமர்வில் அதாலேயின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. எதிர்கட்சித் தலைவர் அதாலேவில் பதவி பறிப்பு குறித்து பேசும் போது ஆளும் கட்சி குறித்து எதிர்கட்சி எம்.பிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

எனவே ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.பிக்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதால் சிலருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இவ்விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.