
அங்காரா: தனது ஆளுகைக்கு உட்பட்ட கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில், இயற்கை எரிவாயு இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக துருக்கிய அரசு அறிவித்துள்ளது.
தன் நாட்டை சுற்றிய கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் இயற்கை எரிவாயு கண்டறியும் பணியில் துருக்கி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் எர்டோகன் கூறியதாவது, “கருங்கடலின் மேற்குப் பகுதியில் துருக்கியின் படா கப்பல் கடலில் துளையிடும் பணியை மேற்கொண்டு வந்தது. அப்போது, மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 320 பில்லியன் கனமீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயு இருப்பதை துருக்கி கப்பல் கண்டுபிடித்துள்ளது.
துருக்கியின் வரலாற்றில் இதுபோன்ற மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டதில்லை. தற்போது, துருக்கி கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இயற்கை எரிவாயு, 2023ம் ஆண்டுமுதல் மக்களின் நுகர்வுக்கு கொண்டுவரப்படும்” என்றார்.
அதேசமயம், இந்த விஷயத்தில், துருக்கி-கிரீஸ் நாடுகளிடேயே மோதலும் ஏற்பட்டுள்ளது. தங்கள் நாட்டு கடற்பகுதியில் துருக்கி அத்துமீறி வருவதாக கிரீஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனால், இருநாடுகள் இடையே புதிய பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.
[youtube-feed feed=1]