டெல்லி

செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று(பிப்ரவரி 28)டன்  தற்போதைய செபி தலைவர் மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக் காலம் நிறைவடைகிறது.  எனவே மத்திய அரசு செபி எனப்படும் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டேவை நியமித்துள்ளது.

மத்திய அரசு நேற்று இரவு,

‘மத்திய நிதி மற்றும் வருவாய் துறைச் செயலராக உள்ள துஹின் காந்த பாண்டேவை செபி தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பதவியேற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு இவர் இப்பதவியை வகிப்பார்’

என்று அரசாணை  வெளியிட்டுள்ளது.

நிதியமைச்சகத்தில் வருவாய் துறையைக் கையாளும் மிக மூத்த அதிகாரியாக கடந்த 1987-ஆம் ஆண்டின் ஒடிசா பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்த பாண்டே, பணி புரிந்ததுடன் பல்வேறு அரசுத் துறைகளில் பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். கடந்த செப்டம்பர் 2024 இல் நிதிச் செயலாளராக அவர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்க.தாகும்.