அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் துக்ளக் தர்பார்.

படத்திலிருந்து அதிதி ராவ் விலகியதால், அவருக்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்திலிருந்து அதிதி ராவ் விலகியதால், அவருக்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தனக்குள் இன்னொருவன் இருந்து தன்னை ஆட்டிப்படைப்பதாக கூறுகிறார் விஜய் சேதுபதி. அவனால் கடுப்பாகிறார் பார்த்திபன். மேலும் கண்ணை படக் படக்கென அடித்து நடிப்பில் மிரட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.

 

[youtube-feed feed=1]