டில்லி:

இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் டிடிவி தினகரனின் பெயர் சேர்க்கப்படவில்லை என்று டில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக  டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உட்பட நான்கு பேரை டில்லி குற்றவியல் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர். சிறையிலும் அடைத்தனர்.

ஒரு மாத சிறைவாசத்துக்குப் பிறகு தினகரன், ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் தினகரனின் பெயர் சேர்க்கப்படவில்லை என்று டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். தினகரன் மீதான குற்றச்சாட்டில் போதிய இல்லை என்றும் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆகவே இந்த வழக்கில் இருந்து தினகரன் விடுவிக்கப்படுவார் என்று தெரிகிறது.

அதே நேரம், “போதிய ஆதாரம் இல்லை என்று இப்போது கூறும் டில்லி போலீசார், ஆதாரமின்றி எப்படி தினகரனை கைது செய்தனர். ஒருவர் மீது சந்தேகம் இருந்தால், விசாரணை நடத்தலாம். கைது செய்வார்களா?  இது அரசியல் விளையாட்டு. மத்திய பாஜக அரசின் பிடியில்தான் டில்லி போலீஸ் இருக்கிறது. ஆகவே பாஜக அரசின் கைப்பாவையாக டில்லி போலீசார் செயல்படுகின்றனர்” என்று பலரும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.