பெங்களூர்,
நேற்று மும்பை செல்வதாக கூறிய டிடிவி தினரகன் இன்று  பெங்களூர் சிறையில் சசிகலாவை  திடீரென சந்தித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறையில் சசிகலாவுடன் நடைபெற இருக்கும்  ஜனாதிபதி தேர்தல் ஆதரவு குறித்தும்,  கட்சியில் நிலவும் குழப்பங்கள் பற்றியும் தினகரன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் அனைத்து அணிகளும் மோடியின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக பகிரங்கமாக தெரிவித்தன.

இந்நிலையில் எடப்பாடி அணியினருக்கு எதிராக, பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் தினமும் தனது  ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் டிடிவி தினகரன்.

இந்நிலையில், நேற்று காலை முக்கிய போன்கால் வந்ததை தொடர்ந்து, அவர் உடடினயாக மும்பை புறப்பட்டு சென்றதாக கூறப்பட்டது.

இதன் காரணமாக, ஜனாதிபதி தேர்தலில் தினகரன் அணியினர் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க இருப்பதாக தகவல் பரவியது.

இந்நிலையில், மும்பை சென்ற டிடிவி தினகரன், இன்று பெங்களூர் சென்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள  சசிகலாவை சந்தித்து பேசினார். அவருடன் வெற்றிவேல் உட்பட 4 எம்எல்ஏக்களும் சசிகலாவை சந்தித்தனர்.

அப்போது, கட்சியில் நிலவும் குழப்பங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதுவரை தினகரன் 6 முறை சிறையில் சசிகலாவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.