சென்னை:

சென்னை பெசன்ட்நகரில் டிடிவி.தினகரனுடன் இரண்டு அமைச்சர்கள் உள்பட 6 அதிமுக எம.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தினர்.

எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள், டிடிவி தினகரன் மீண்டும் அரசியலுக்கு வருவதை விரும்பாத நிலையில், கட்சியின் ஒருசில அமைச்ர்கள் மற்றும்  எம்எல்எக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இதுவரை 34 எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்து உள்ளனர். இதன் காரணமாக எடப்பாடி அரசு நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில், கட்சியில் மீண்டும் கோலோச்ச டிடிவி தினகரன் முடிவு செய்து, அதற்கான காய்களை நகர்த்த தொடங்கி உள்ளார்.

தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள டிடிவி தினகரன் நேற்று மீண்டும் சசிகலாவை பெங்களூர் சிறையில் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், டிடிவி தினகரன் எம்எல்ஏக்களுடன் கோட்டையில் முதல்வர் எடப்பாடியும் ஆலோசனை நடத்தினார்.

அப்போது டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள், டிடிவி தினகரனை கட்சியில் முன்னிலைப்படுத்த வேண்டும், இல்லையேல் ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்பட எம்எல்ஏக்கள் தங்கத்தமிழ்செல்வன்,. தோப்பு வெங்கடாச்சலம், ஆம்பூர பாலசுப்பிரமணியம்  உளப்ஆட 6 பேர் டிடிவி தினகரனுடன், அவரது பெசன்ட் நகர் இல்லத்தில் தீவிர ஆலோசனை நடத்தினர்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் வேளையில், டிடிவி தினகரன் தனியாக ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உளளது.