திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளின் தினசரி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது.
ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நண்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன சலுகை டிக்கெட்டுகளை வழங்குகின்றன, இதன்படி விமான நிலையத்தில் தற்போதுள்ள டிக்கெட் ஒதுக்கீடு 100ல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
விமான நிலைய வளாகத்தில் உள்ள தற்போதைய முன்பதிவு கவுன்டரில் பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். விமானப் பயணிகள் தங்கள் செல்லத்தக்க போர்டிங் பாஸை காண்பித்து இந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
அதேவேளையில், திருமலையில் உள்ள கோகுலம் ரெஸ்ட் ஹவுஸுக்குப் பின்னால் உள்ள கவுண்டரில் ஆஃப்லைனில் வழங்கப்படும் ஸ்ரீவாணி டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை TTD ஒரு நாளைக்கு 900 லிருந்து 800 ஆகக் குறைத்தது, அவை பொதுவாக முதலில் வருபவருக்கு முதலில் சேவை அடிப்படையில் கிடைக்கும்.
இந்த மாற்றங்கள் இன்று (நவம்பர் 22) முதல் செயல்படுத்தப்படும் என்று TTD தெரிவித்துள்ளது.