டெல்லி

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.

நேற்று உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்..

ராகுல் காந்தி தனது உரையில்

“இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம். இந்தியாவில் 90 சதவீத மக்கள் நிர்வாக அமைப்பை விட்டு விலகி வெளியே உள்ளனர்.

அவர்களுக்காக இந்த கணக்கெடுப்பு நடத்துவது அவசியம். 90 சதவீத மக்களுக்கு திறனும், கல்வி அறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்கு தொடர்பு இல்லை.

இதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை கோரிக்கையை முன்வைத்துள்ளோம். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காங்கிரசுக்கு ஒரு கொள்கை கட்டமைப்பு மற்றும் வழிகாட்டி. அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் 10 சதவீத மக்களுக்கானது அல்ல,

அது அனைத்து குடிமக்களுக்கானது. அரசியலமைப்பு ஏழை மக்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகியோரால் பாதுகாக்கப்படுகிறது”

என்று தெரிவித்துள்ளார்.