அகமதாபாத்:

மெரிக்க அதிபர்  டிரம்ப் தனது மனைவி மெலினாவுடன் முதன்முறையாக 2 நாள் பயணமாக வரும் 24ந்தேதி இந்தியா வருகிறார்.

இந்த வருகையின்போது, குஜராத் மாநிலத்தின்  அகமதாபாத், சபர்மதி ஆசிரமம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார். டிரம்ப் வருகையையொட்டி, குஜராத் மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் கலந்துகொள்ளும் பகுதிகளில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

பிரதமா் மோடி கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது, அங்குள்ள அமெரிக்கவாழ் இந்தியா்கள் பங்கேற்ற ‘ஹௌடி மோடி’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் அதிபா் டிரம்ப்புடன் அவா் கலந்துகொண்டாா். அப்போது அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதுபோல, அதிபா் டிரம்ப்பின் இந்தியப் பயணத்தின்போது,  பிரம்மாண்ட வரவேற்பு  நிகழ்ச்சியை ஆமதாபாதில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக அகமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள குடிசைப்பகுதிகள் டிரம்ப் கவனத்தை ஈர்க்காதவாறு, அந்த பகுதியில் உயரமான சுற்றுச்சுவரை அரசு அமைத்து வருகிறது… இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சிபி இணையதளம் கார்டூனை வெளியிட்ட உள்ளது. இந்த கார்ட்டூன் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது…

பத்திரிகை டாட் காம் இணையதள வாசகர்களுக்காக அந்த கார்ட்டூன் இங்கே பதிவிடப்பட்டு உள்ளது…

நன்றி: சிஃபி