வாஷிங்டன் :

மெரிக்காவில் நடந்து வரும் இனவெறி வன்முறை 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்துவந்த டிரம்ப், வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சீனாவுடனான உறவு தொடருமா என்பதை விரைவில் அறிவிப்பேன் என்று கூறினார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று நோய் சீனா அமெரிக்காவிற்கு கொடுத்த பரிசு என்று குறிப்பிட்ட அவர், சீனா இதனை தோன்றிய இடத்திலேயே நிறுத்தியிருக்க வேண்டும், ஆனால், இதை செய்ய தவறியது, சீனாவின் வேறு எந்த பகுதிக்கும் பரவாமல் வுஹானில் மட்டும் பரவியதோடு எப்படி நின்றுவிட்டது என்று பலரும் கேட்கின்றனர். இது சீனா அமெரிக்காவிற்கு, ஐரோப்பாவிற்கு ஏன் உலகத்திருக்கே கொடுத்த மிகவும் மோசமான பரிசு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

கொரோனா வைரஸ் தோன்றுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் சீனாவுடன் 19 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது, அந்த கையெழுத்தின் ஈரம் காய்வதற்கு முன் இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டுவிட்டது, இதனை உணர்ந்து சீனா செயல்பட்டதாக தெரியவில்லை. இது வுஹானில் இருந்து பரவ வில்லை என்றால் அது ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் எப்படி வந்தது.

சீனா அமெரிக்காவைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டது, சீனாவை மீண்டும் மறுசீரமைக்க நாங்கள் உதவினோம், அவர்களுக்கு ஆண்டுக்கு 38 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் வழங்கினோம். சீனாவுடனும் இன்னும் பிற நாடுகளுடனும் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் எவ்வளவு அறியாமையில் இருந்திருக்கின்றனர். ஆனால் அதெல்லாம் மாறிக்கொண்டு வருகிறது.

நாங்கள் சீனாவுக்கு நிறைய செய்துள்ளோம், சீனாவுடன் வர்த்தகம் செய்வது ஒரு நல்ல விஷயமாக இருக்கும், ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை, விரைவில் நான் உங்களுக்குத் தெரியப்படுத்துவேன்.

உலக நாடுகள் பலவற்றுடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம், சீனாவுடனும் நாங்கள் பணியாற்றுவோம். எல்லோரிடமும் பணியாற்றுவோம். ஆனால் நடந்தது ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

[youtube-feed feed=1]