வாஷிங்டன்

மெரிக்க அதிபர் தேர்தலில் தம்மை இப்போது தேர்வு செய்தால் இனி எப்போதுமே வாக்களிக்க வேண்டாம் என டிரம்ப் கூறியுள்ளார்

வரும் நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் நடக்க உள்ள பொதுத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபரி டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது., தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்து துணை அதிபரும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிசுக்கு  தனது முழு ஆதரவை அளிப்பதாக ஜோ பைடன் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

புளோரிடாவின் வெஸ்ட் பாம் கடற்கரையில் நடந்த பிரசாரத்தில் கிறிஸ்தவர்களிடையே உரையாற்றிய டிரம்ப்,

“நான் கிறிஸ்தவர்களை நேசிக்கிறேன். நான் ஒரு கிறிஸ்துவன். கிறிஸ்தவர்களே, வெளியே வந்து வாக்களியுங்கள். இன்னும் நான்கு ஆண்டுகள், நீங்கள் மீண்டும் வாக்களிக்க தேவையில்லை. நாங்கள் சரி செய்துவிடுவோம், அது உங்களுக்கே தெரியும்”

என்று கூறினார்.

டிரம்ப் பேசியது குறித்து, பிரசார செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங்.

“டிரம்ப் நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறார். இந்த நாட்டை ஒன்றிணைத்தல் மற்றும் ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் செழிப்பைக் கொண்டுவருவது பற்றி டிரம்ப் பேசினார்”

என்று விளக்கியுள்ளார்.